Friday, October 31, 2008

வேலை காலி இல்லை / ஏற்புடையதாக இல்லை

உலக பொருளாதார வீழ்ச்சியின் உச்ச கட்ட தாக்கத்தின் விளைவு இந்த மந்த நிலை என்று கூறினால், யாரால் இக்கூற்றை மறுக்க இயலும்?

சமீப காலமாக எங்கும் வாசிக்கப்படும் செய்தி இது, நாளிதழ்களுக்கு என்னவோ இது நல்ல விசயம் தான், பத்திகளை நிரப்ப! ஆனால் ஆட்குறைப்பால் நித்தம் நித்தம் வேலையில‌க்கும் தொழிலாளர்களுக்கு மிகவும் வருத்தம் தரக்கூடிய விசயம்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டோர் தற்காலிக வேலையில் இருந்தவர்கள். எவ்வளவு தீவிரமாக வேலை தேடினாலும் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது இல்லையெனில் ஏற்புடையதாக இல்லை. இது தான் அவர்களிடம் நான் தெரிந்து கொண்டது. பல முன்னனி நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுக்கும் சமாச்சாரத்திற்கு தற்காலிக விடுப்பு கொடித்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

அரசாங்க‌ வேலையிலும் ஆட்குறைப்பு, இது இன்னுமொரு செய்தி. ஒரிரு தினங்களுக்கு முன்பு நான் நாளிதழிதளில் வாசித்தறிந்த விசயம், சிங்கப்பூரில் அடுத்த வருட ஊழிய ஏற்ற விகிதம் இரண்டு சதவீத்த்தை ஒட்டியே இருக்கும் என்பது இன்னும் ஒரு வருத்தம் தரும் செய்தி. எங்கும், எதிலும் விலை ஏற்றம், பண வீக்க விகிதம் வரலாறு காணாத உயர்வு, ஆனால் சம்பளம் மட்டும் உயர்வதில்லை. அடுத்த காலாண்டில் இன்னும் என்ன நடக்குமோ, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி இருக்கும் வேலையினை தக்க வைத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமென திட்டமிட்டு அதன் படி செயல்படுவது நலம் என்பது என் எண்ணம்.

No comments: